states

img

புதிய வரலாற்றை எழுதுகிறது நந்திகிராம் பட்டொளி வீசிப் பறக்கிறது மீண்டும் செங்கொடி!

கொல்கத்தா, மே 17 மேற்கு வங்க அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கிய முக்கியமான பெயர்கள் நந்திகிராம், லால்கட் மற்றும் ஜங்கல்மஹால். மம்தா பானர்ஜி, பிற்போக்கு வகுப்புவாத தீவிரவாத சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து, இடதுசாரி முன்னணி அரசாங்கத்தைக் கவிழ்க்கவும், சிபிஎம்-ஐ வீழ்த்தவும் கலவரங்களுக்கும் பயங்கரவாதச் செயல்களுக்கும் களம் அமைத்துக் கொடுத்த இடங்கள் இவை.

லால்கட், ஜங்கல்மஹால் உள்ளிட்ட மேற்கு வனப்பகுதியில் மாவோயிஸ்ட் வேடத்தில் திரிந்த திரிணாமுல்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை கொன்று ஒடுக்கியது, சொத்துகளைச் சூறையாடியது. மக்களை தவறாக வழிநடத்தி கலவரத்திற்கு இட்டுச் சென்றவர்களே தேர்தல் நேரத்தில் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி ஆட்சி மாற்றத்தை உறுதி செய்தனர். இருப்பினும், புருலியா, விஷ்ணுபூர், பங்குரா, ஜார்கிராம், மிட்னாபூர், தம்லுக் ஆகிய ஆறு நாடாளுமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதி மீட்சிக்கான பாதையில் உள்ளது.

நந்திகிராமம் மற்றும் வனப் பகுதிகளில் மீண்டும் சிவப்புக் கொடிகள் பறக்கின்றன. வன்முறைகளை எதிர்கொண்டு இடது முன்னணி ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். விஷ்ணுபூர், பாங்குரா, ஜார்கிராம், தம்லுக் ஆகிய நான்கு தொகுதிகளில் சிபிஎம் போட்டியிடுகிறது. மிட்னாபூரில் சிபிஐ போட்டியிடுகிறது. புருலியாவில் காங்கிரசை இடதுசாரி கட்சிகள் ஆதரிக் கின்றன.

அனைத்து தொகுதிகளிலும் பலத்த மும்முனைப் போட்டி நிலவுகிறது. திரிணாமுல்லும் பா.ஜ.க.வும், சாதி- மத- வகுப்புவாத பிரிவினையை ஏற்படுத்தி ஓட்டு கேட்கின்றன. தொடக்கத்தில் இடதுசாரி முன்னணியை புறக்கணித்த ஊடகங்கள், இப்போது அதன் முன்னேற்றத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இத்தொகுதிகளில் மீண்டும் வெற்றி பெற சிபிஎம்மும் இடது முன்னணியும் வலுவான போராட்டத்தை நடத்தி வருகின்றன.

கொல்கத்தாவில் இருந்து கோபி (தேசாபிமானி)

;